வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் வீழ்ச்சி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024

வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், நிதி நிலைமை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை மறுசீரமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒரு தரப்பினர் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து மாத்திரம் விசேட கவனம் செலுத்த முடியாது.  ஒட்டுமொத்த மக்களின் நலனையும் கருத்திற்கொண்டு தான் நிதி நிலைமை குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வணிக கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

நாட்டில் 5 கோடியே 75 இலட்சம் வங்கி வைப்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 60 சதவீதமான வைப்பாளர்கள் 5,000 ரூபாவுக்கும் குறைவான வைப்புக்களையே வைத்துள்ளனர்.

ஆகவே, நிதி நிலைமை தொடர்பில் தற்போது மறுசீரமைப்புக்கள் ஏதேனும் செய்தால் அதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா என்பது குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: