வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, November 7th, 2019

வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒருபலத்த சூறாவளியாக விருத்தியடைவதுடன் அதற்கு அடுத்த 36 மணித்தியாலங்களில்ஒருமிகக் கடும் சூறாவளியாக விருத்தியடைந்து வடக்கு ௲ வடமேற்கு திசையில் பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்து மேற்கு ௲ வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட அகலாங்கு 13N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85E ௲ 91E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும்காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது


கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகின்றது?
முன்பொரு காலத்தில் நாட்டில் கூட்டுறவு தான் ஏக போக உரிமையைக் கொண்டிருந்தது: யாழ். மாவட்டச் சமூக அபிவி...
சீதனக் கொடுமை வடக்கில் அதிகம் - இல்லாதொழிக்க சட்டம் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியு...
பண்டத்தரிப்பு பகுதியில் குப்பைக்கு வைத்த தீயால் பற்றி எரிந்தது வீடு !
வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை