வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் ; நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை !

Monday, December 10th, 2018

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.இதனுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


பரீட்சைகளை மையப்படுத்தி தரம் 10 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை முன்னனெடுக்க நடவடி...
எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை – அமைச்சர் மகிந்த அமர...
20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு - மூன்று வருடங்களுக்கு வழங்க திட்டம் என நிதி இராஜாங்க...