வங்களாவடி சந்தி பகுதி கிணறொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!

Friday, January 24th, 2020

வேலணை வங்களாவடி சந்தி பகுதி கிணறொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலணை சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் பின் பகுதியில் உள்ள கிணற்றிலேயே குறித்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் சடலமாக காணப்படுபவர் கட்டடப் பொருள் விற்பனை நிலைய உரிமையாளரது சகோதரரான மண்கும்பானைச் சேர்ந்த 41 வயதுடைய குடும்பஸ்தரான புலேந்திரராஜா சக்திகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்து தெரியவருவதாவது – ஆட்டோ ஒன்றை சொந்த முதலீடாக கொண்டு தனது வருமானத்தை ஈட்டிவந்த குறித்த நபர் நேற்றையதினம் தனது சகோதரரின் கடைக்கு வந்துள்ளார். கட்டடப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் பகுதியில் தனது முச்சக்கரவண்டியை அவர் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரை காணாது மாலை வேளையில் உறவினரும் கடையில் பணியாற்றுபவர்களும் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கட்டடப்பொருள் விற்பனை நிலைய தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க  சென்றிருந்த வேளை அப்பகுதியில் உள்ள கிணற்றில் குறித்த நபரை இறந்த நிலையில் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு குறித்த தரப்பினர் சென்று பாரவையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: