வங்களாதேஷ் மத்திய வங்கி திருட்டு! விசாரணைகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் இணக்கம்!
Tuesday, March 22nd, 2016பங்களாதேஷின் வெளிநாட்டு ஒதுக்கத்தில் இருந்து திருடப்பட்ட 81 மில்லியன் டொலர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்க எப்.பி.ஐ என்ற பிராந்திய விசாரணை பிரிவு இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த திருட்டை அடுத்து பங்களாதேஷின் மத்திய வங்கி ஆளுநர் அண்மையில் பதவியில் இருந்து விலகினார்.
இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாகவே இந்த பணம் பறிமாறப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பல்வேறு நலன்புரித்திட்டங்களுக்காகவென்று இந்த பணம் அனுப்பட்டுள்ளது.
இந்த தகவலை பங்களாதேஷ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளபோதும், அமரிக்க தரப்பு இது தொடர்பில் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை. பங்களாதேஷ் மத்திய வங்கியின் கணக்கை உடைத்த சிலர் அதிலிருந்த 81 மில்லியன் டொலர் பணத்தை பிலிப்பைன்ஸூக்கு அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில் 20 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பும்போதே இந்த மோசடி குறித்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து பங்களாதேஷின் விசாரணையாளர்கள், இலங்கை, நியூயோர்க் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று விசாரணைகளை நடத்தவுள்ளனர்.
Related posts:
|
|