வங்கக் கடல் தாழமுக்கம் மேலும் வலுவடைகிறது – கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
Tuesday, October 13th, 2020வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் பலத்த அல்லது மிகக் கடுமையான காற்று, பலத்த மழைவீழ்ச்சி, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன் காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|