வகுப்புத்தடையை நீக்கக்கோரி பல்கலை மாணவர்கள் போராட்டம்!

Thursday, March 30th, 2017

பல்கலைக்கழகத்தில் 13 மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக்கோரி மாணவர்கள் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்று (29) காலை பல்கலைக்கழகத்தில் கறுப்புதுணியால் வாய்மூடி அமைதியான போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக தமது கண்டனத்தினையும் தெரிவித்திருந்தனர்.

மேலும் கடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்னர் கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும் துணை வேந்தரினால் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: