லொத்தர் சீட்டு விவகாரம் முடிவுக்கு வந்தது !

லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிற்கு குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் நிதி அமைச்சிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி, லொத்தர் சீட்டு ஒன்றில் விலை 30 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.
இருப்பினும் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளாவிய ரீதியில் லொத்தர் சீட்டு முகவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே, லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
ரயில்வே போராட்டம் தொடர்கிறது – O/ L பரீட்சார்த்திகள் அவதி!
யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை - யாழ்...
பாஃம் எண்ணெய் இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு - அரசாங்க கணக்குகள் பற்றிய குழ...
|
|