லொத்தர் சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கான காசோலைகள் பிரதமரினால் வழங்கிவைப்பு!

Tuesday, February 16th, 2021

தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

மூன்று மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் வெற்றியாளர்களாக தெரிவான 09 பேருக்கு ரூபாய் 52 கோடிக்கும் அதிகமான பெறுமதியான காசோலைகள் பிரதமரினால் குறித்த வெற்றியாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

தேசிய லொத்தர் சபையின் மெகா பவர், கொவிசெத, மஹஜன சம்பத, சுபிரி வாசனா, தன நிதானய ஆகிய சீட்டிழுப்பின் வெற்றியாளர்களுக்கே இவ்வாறு காசோலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், தேசிய லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, தலைமை முகாமையாளர் ஜீ.எம்.வை.ஜயசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: