லொக்டவுன் அச்சத்தில் கடைகளி்ல் குவிந்த மக்கள் – பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு!

Tuesday, October 6th, 2020

கம்பஹாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், லொக்டவுன் அச்சத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளவிய ரீதியில் சுப்பர் மார்க்கட்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே மக்களை அதிகம் காண முடிந்துள்ளது.

இதேவேளை, பல இடங்களில் பொருட்கள் மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாணந்துறை உட்பட பிரதேசங்களில் இவ்வாறு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திடீரென லொக்டவுன் செய்யப்பட்டால் பாரிய நெருக்கடி நிலை ஏற்படவுள்ளதாக வர்த்தக நிலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வாகன வரிசை ஒன்றை நேற்றைய தினம் அவதானிக்க முடிந்துள்ளது.

இதேவேளை தற்போதைய நிலையில் பொது இடங்களில் மக்களை ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் முயற்சிக்க வேண்டாம் என தொற்று நோய் ஆய்வுப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: