லீசிங் நிறுவனங்கள் தொடர்பில் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொது மக்களின் முறைப்பாடுகளை பெற நடவடிக்கை!

Tuesday, June 23rd, 2020

நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை வர்த்தகம் ஆகியவற்றில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்களின் முறைப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை வர்த்தகம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழிய நியமிக்கப்பட்ட குழு இந்த வேண்டு கோளை விடுத்துள்ளது. குறித்த குழு மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையில் இரண்டாவது தடவையாக கூடியது.

இதன்போதே பொது மக்களின் ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நிதி வணிகம் மற்றும் நிதி குத்தகை வணிகம் குறித்து பொதுக் மக்களின் கருத்துகளையும் சிவில் அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கருத்துகளையும், முறைப்பாடுகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை மத்திய வங்கி, இலக்கம் 30, இலங்கை மத்திய வங்கி கொழும்பு என்ற முகவரிக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக தமது ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை அனுப்பலாம்.

மேலதிகமாக டி.எல்.சி.டி. C.B.S.L.LK அல்லது D.S.M.B.F.I AT CBSLDOT LK மின்னஞ்சல்களும் பரிந்துரைகளையும் யோசனைகளையும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: