லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்!

Wednesday, August 14th, 2019

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.

இது கிறிஸ் கெய்லுக்கு 300 வது போட்டியாகும்.  300 வது போட்டியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 ஓட்டங்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியலில் பிரைன் லாராவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

லாரா 299 போட்டியில் 10405 ஓட்டங்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல் நேற்றைய போட்டியில் 9 ஓட்டங்களை தொட்டபோது 10406 ஓட்டங்கள் அடித்து சாதனையை முறியடித்தார்.

Related posts: