ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Monday, April 10th, 2017

மீனவர்கள் கடல் எல்லையை மீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்காக பாக்கு நீரிணையில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – இலங்கை மீனவ பிரச்சினை தொடர்பான உயர்மட்ட குழுக்கூட்டம் கொழும்பில் கடந்த வௌ்ளிகிழமை இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் இரு நாட்டு அமைச்சர்களும், கடற்றொழில் அதிகாரிகளும், மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

கொழும்பில் இடம்பெற்ற மீனவ பேச்சுவார்த்தையானது மிக பயனுள்ளதாக அமைந்துள்ளதென இலங்கை அதிகாரியொருவர் த ஹிந்துக்கு தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என இந்திய தரப்பினர் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், இந்திய மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்கு ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தின் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

Related posts:

இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு - கொழும்பை சேர்ந்த மேலும் இருவர் இன்றும் பல...
நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி – ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் நாடாளுமன...
காலிமுகத்திடலில் நடைபெறும் வாகனத்தை தன் தலைமுடியால் இழுக்கும் 60 வயது திருச்செல்வத்தின் உலக சாதனை நி...