ரூ. 11 கோடிக்கும் அதிக பணத்துடன் இலங்கையர் விமானநிலையத்தில் கைது!
Monday, January 30th, 2017சுமார் ரூபா 11 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணத்துடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் துபாய் செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம் நிலையம் வந்துள்ளதுடன், சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளை அடுத்து குறித்த நபரிடமிருந்து ரூபா 112 மில்லியனுக்கும் அதிகமாகன வெளிநாட்டுப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பான வகையில், வெளிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளதாக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
முறிகண்டியில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் Rapid Antigen பரிசோதனை – இதுவரை 117 மரணங்கள் கொ...
மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் இருந்தபோது மின்வெட்டு - சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு என பொதுப...
|
|