ரூபாவின் வீழ்ச்சியால் வெளிநாட்டுக் கடன் தொகை பாரியளவில் அதிகரிப்பு!

Sunday, February 25th, 2018

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதால் வெளிநாட்டு கடன் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 30.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது, அமெரிக்க டொலர்ஒன்றின் பெறுமதி 155 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இந்தக் கடன் தொகை 4774 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

இருப்பினும் அண்மையில் அமெரிக்க டொலரின் விலை மேலும் உயர்வடைந்த காரணத்தினால் இந்தக் கடன் தொகை 6160 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு கடன் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: