ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சரத் கொஹன்காகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொஹன்காகே ஏற்கனவே ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்தன, ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவரை நியமித்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைகளைத் தொடர்ந்து, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தலைவர் பதவியில் சரத் கொஹான்காகே அமர்த்தப்பட்டுள்ளார்
Related posts:
எரிபொருள் விலை அதிகரிக்காது!
ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் மங்கள சரவீர சந்திப்பு!
சேவையை புறக்கணித்தால் கடும் நடவடிக்கை - சுகாதார அமைச்சர் ராஜித!
|
|