ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்று உத்தரவு!

Wednesday, May 13th, 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அது தொடர்டடிபான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்’வு துறை மேற்கொண்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் விடுத்த உத்தரவை இரத்து செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டமையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் குறித்த பிணை உத்தரவில் குறைபாடு காணப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் ராஜித சேனாரத்ன தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதான நீதவானினால் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்க முடியும் என சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டதரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு முன்னதாக கொழும்பு பிரதான நீதவானினால், அவர் தொடர்பில் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் சுகாதார முன்னேற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றிருக்க கூடிய வாய்ப்பிருந்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதி அவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்படாமையானது சர்ச்சைக்குரியது என நீதிபதி அறிவித்துள்ளார்.

சிறைச்சாலை சட்டத்துக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்திருந்தால் சிறைச்சாலை மருத்துவமனை அல்லது சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கையை பெற்று கொள்வதற்கு அரச கட்டுபாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மாத்திரம் அனுமதிப்பட வேண்டும் என நீதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றமை சிறைச்சாலை சட்டத்தின் 65 வது சரத்தை மீறும் செயற்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: