ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல்: விரிவான விசாரணைக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பணிப்பு!

Wednesday, February 2nd, 2022

ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபருக்கு குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், இது தொடர்பில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

முன்பதாக வெளியாள்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்தனர்.

ராகம வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் சில மாணவர்கள் மீது விடுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: