ரஷ்ய நாட்டவர்களை மாலைதீவுக்கு பயணிக்க வேண்டாம் என இலங்கையின் ரஷ்ய தூதரகம் அறிவிப்பு!

Thursday, February 8th, 2018

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் மாலைதீவுக்கு பயணிக்க வேண்டாம் என ரஷ்ய நாட்டவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையாலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக  ரஷ்ய செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தூதரக சேவை நிறுவனமானது மாலைதீவு பிரதேசத்துக்கு பொறுப்பானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய முன்னறிவித்தல் ஒன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தூதரகம்குறிப்பிட்டுள்ளது.

Related posts: