ரஷ்ய ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைப்புவிடுத்தார் இலங்கை ஜனாதிபதி!

Monday, June 17th, 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்காவினால் வர்த்தக தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

மேலும் மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: