ரஷ்ய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து!

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றியை ஈட்டிய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய ஜனாதிபதியின் வெற்றி அவரது அரசியல் தலைமைத்துவம் அரசியல் முதிர்ச்சி என்பனவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொது இலக்குகளை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
2017 முதல் மருத்துவ பீட மாணவர்கள் அனைவருக்கும் மாகாபொல கொடுப்பனவு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்!
வடக்கு மாகாணசபை ஆளுமையோடு நிர்வகிக்கப்படவில்லை - எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட...
|
|