ரஷ்யா மீதான தடை: மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடும் சீன அதிபர்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் தடை உத்தரவுகளைச் சீன அதிபர் சீ சின்பிங் (Xi Jinping) கடுமையாகச் சாடியுள்ளார்.
அத்துடன் இந்தத் தடை உத்தரவுகள் உலகப் பொருளியலைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும் சீன் அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைனில் நிலவும் போர் குறித்து வெளியிடும் கருத்தக்களைில் அதிகபட்சக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யப் படையெடுப்பு தொடர்பில் சீன அதிபர் சீ சின்பிங் வெளியிட்டிருக்கும் ரஷ்யா சார்பான வலிமையான அறிக்கை அது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்..
முன்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனுடன் (Emmanuel Macron) ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸுடனும் (Olaf Scholz) கலந்துகொண்ட உச்சநிலைச் சந்திப்பில் அதிபர் சீ சின்பிங் பேசினார்.
இணையம் வழி நடந்த அந்தச் சந்திப்பில், உக்ரைனில் சண்டை நிறுத்தத்தை எட்ட ஐரோப்பிய நாடுகள் எடுத்திருக்கும் முயற்சிகளுக்குத் சீ சின்பிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் உக்ரைனில் நிலவும் போர் சூழல் கவலை அளிப்பதாகக் கூறிய சீன அதிபர், அது கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|