ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவை பின்தொடர்ந்து வாக்களிப்பதில் இருந்து இலங்கையும் விலகல்!
Friday, February 24th, 2023ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் ரஷ்யா தொடர்பான பிரேரணையில் வாக்களிப்பதில் இருந்து இலங்கை விலகியுள்ளது.
எனினும் யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பை கண்டிக்கும் தீர்மானம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், யுக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்பினரை மீள பெற வேண்டும் எனவும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறது.
இந்த தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, மாலி, நிகரகுவா மற்றும் சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன.
அதேநேரம் இலங்கை, சீனா, இந்தியா, ஈரான் மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை.
அதேநேரம் வியன்னாவில் இடம்பெற்ற ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டத்தில் ரஷ்யா கருத்துரைத்த போது பல பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
யுக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பித்து ஒரு வருடமாகின்ற நிலையில், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பில் வெளிநடப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் வாக்கெடுப்பு என்பன இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|