ரஷ்யாவிலிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Friday, September 10th, 2021

ரஷ்யாவிடமிருந்து அடுத்த வாரம் மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளை முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் இதுவரை ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: