ரஷ்யாவிலிருந்து மத்தளைக்கு மற்றொரு விமான சேவை!

Tuesday, December 27th, 2022

ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவை வரும் 28ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் Red Wings ஏர்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கு புதிய விமான சேவையை தொடங்கவுள்ளது.

மாஸ்கோவில் இருந்து ரஷ்யாவின் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இருமுறை விமானங்களை இயக்க குறித்த விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படுமாயின் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் 3 நேரடி விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

000

Related posts: