ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது – பதில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, July 17th, 2022

ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ரஷ்யாவை உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

மே- 2 ஆம் திகதியை  வர்த்தக விடுமுறையாகப்  பிரகடனம் செய்யுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ் ....
ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் நினைவேந்தல் நாடாளுமன்றிலும் ஒரு நிமிட அஞ...
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு!