ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே பிரதமருடன் சந்திப்பு!

Wednesday, September 29th, 2021

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சேவையை பொறுப்பேற்பதற்கு ரஷ்யாவிற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சேவை குறித்து திட்டமிடும் வகையில் பிரதமருடனான இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வரலாற்று நட்பை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு திருமதி.ஜனிதா ஏ லியனகேக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே இப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக கம்பஹா விக்ரமாராச்சி சுதேச பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பணியாற்றினார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவியான ஜனிதா ஏ லியனகே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: