ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்பாட்டுக்கு அனுமதி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதிசெய்துள்ளார்.
நாட்டில் தீவிரமாக பரவும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவே இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் 20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்துத் தொகை எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வசதியின் மூலம் இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கொள்வனவுசெய்த ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்ணிக் தடுப்பு மருந்தும், சீனாவின் சைனாபார்ம் நிறுவனத்தின் தடுப்பு மருந்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தியாகும்.
சுகாதார அமைச்சு முறையான வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பு மருந்தேற்றல் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|