ரஷ்யாவிடம் இருந்து 10 உலங்கு வானூர்திகள் கொள்வனவு!

Saturday, July 7th, 2018

ரஷ்யாவிடம் இருந்து 10 எம்.ஐ. 171 ரக உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதற்கு, இலங்கை தனது கடன் எல்லையை நீடித்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டிஃபென்ஸ்வேர்ல்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய 300 மில்லியன் கடன் எல்லையை இதற்காக பயன்படுத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வான்படையினரும் 4 எம்.ஐ.17 ரக வானூர்திகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுகின்ற தமது அதிகாரிகளுக்காக இவை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts: