ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் – எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!
Tuesday, May 3rd, 2022ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட ஐந்து அரச எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் மொஸ்கோவில் இருந்து எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெறாத பத்து மேற்குலக நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் உக்ரைனுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய அரச எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு ஒரு பீப்பாய்க்கு 35 டொலர்களை குறைவாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான எரிவாயு ஒப்பந்தத்தின் கால எல்லை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கை ரஷ்ய எரிவாயு நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் ஐந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களும் ரஷ்யாவிடம் இருந்து 7 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|