ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Friday, June 10th, 2022

நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

எனவே  தங்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், நாட்டில்  நிலவும்  எரிபொருள் நெருக்கடி   தொடர்பில்  ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி  செயற்படுவதாகவும்  09 கட்சிகளின் தலைவர்கள்  குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: