ரஷ்ய,உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானம்!

Tuesday, March 1st, 2022

ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளிற்கான விசாவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் சிக்குண்டுள்ள ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை கட்டணங்கள் எதுவுமின்றி நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் தற்போது 11 ஆயிரத்து 463 ரஷ்ய சுற்றுலாப்பயணிகளும் 4 ஆயிரம்  உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் உள்ளனர்.

இந்நிலையிலேயே ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளிற்கான விசாவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: