ரவிராஜின் கொலை வழக்கு – சந்தேக பர்கள் விடுதலை!

Sunday, December 25th, 2016

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்குடன் தொடர்புடைய சகல பிரதிவாதிகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரையும் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிப்பதாக விசேட ஜூரி சபை ஏகமனதாக தீர்மானித்தைத் தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியரட்ன தீர்ப்பை அறிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக ஆறு சந்தேக நபர்களுக்க எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  வழக்கு விசாரணை இடம்பெறும் காலப்பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது கடற்படையின் புலனாய்வு பிரிவை சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களும் மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்கள்.

இலங்கையின் வரலாற்றில் முதல்தடவையாக விசேட ஜூரி சபையின் முன்னிலையில் இவ்வாறான வழக்கு விசாரிக்கப்பட்டது. நாள் பூராகவும் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரலாற்றில் முதற்தடவையாக நள்ளிரவு தாண்டிய நிலையில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

asd1

Related posts: