ரயில் விபத்துக்களை தடுக்க நீண்டகால பாதுகாப்புத் திட்டம்!

Tuesday, February 27th, 2018

ரயில் பாதைகளில் ஏற்படும் விபத்துக்குரிய இடங்களைக் கண்டு விபத்துக்களைத் தடுப்பதற்காக குறுகிய, நீண்டகாலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென்று ரயில்வே திணைக்களத்தின்மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

தற்போது ரயில்கள் நிறுத்தப்படும் இடங்களை குறைத்தல், ரயில்வே நேர அட்டவணையில் மாற்றங்களை செய்தல் ஆகிய குறுகிய கால நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை ரயில் பயணிகளை தெளிவூட்டுவதற்கான ஒலிபரப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் ரயில்களில் விசேட வர்ணங்களைப் பயன்படுத்துவதற்கும் ஆலோசனைகள்முன்வைக்கப்பட்டுள்ளன.

வீதிகள் அமைக்கப்படும்பொழுது ரயில் பாதைகளுக்கு அருகாமையில் அவை அமையாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் நீண்டகாலத் திட்டமாக கரையோர ரயில் பாதையை மேம்படுத்தவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: