ரயில் விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்!

Saturday, July 28th, 2018

யாழ்.புங்கன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சேர்ந்த 3வது இளைஞனும் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் அரியாலை புங்கன் குளம் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் க டக்க முயன்றபோது விபத்து சம்பவித்துள் ளது. இதன்போது கந்தசாமி சந்திரகுமார் (வயது 29), இராஜகோபால் கிரிஷாந்த் (வயது27) ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன்போது சீக்கியன் சஞ்சீவன் என்ற இளைஞன் படுகாய மடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டார்.

குறித்த இளைஞன் கவலைக்கிடமான நிலையிலேயே வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை குறித்த இளைஞனும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: