ரயில் பயணிகளுக்கு இலத்திரனில் அட்டை அறிமுகம் – போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்!
Wednesday, February 12th, 2020ரயில் பயணிகளுக்கு இலத்திரனில் அட்டை அறிமுகம் செய்ய திட்டம் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டையை அறிமுகப்படுத்துவதற்கும், ரயில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு Online முறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கும் கட்டமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதாக பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விரையில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இரத்மலானை ரயில் பிரிவின் செயற்பாடுகளை கண்டறிவதற்காக நேற்று அமைச்சர் அங்கு விஜயம் செய்தார்.
Related posts:
அச்சுவேலியில் தொலைபேசி விற்பனை நிலையம் தீக்கிரை!
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி மூல டிப்ளோமா பயிற்சி நெறி!
வவுனியாவில் விபச்சாரத்தினால் எச்.ஐ.வி. தொற்று பரவுகிறது: பாலியல் நோய்த்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி...
|
|