ரயில் சேவையில் புதிதாக 232 ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் – ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர்!
Tuesday, June 19th, 2018ரயிலவே துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம 2020ம் ஆண்டளவில் ரயில் சேவையில் புதிதாக 232 ரயில் பெட்டிகள் ஒன்றிணைக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளாந்தம் சுமார் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட ரயில் பயணிகள் பயணங்களில் ஈடுபடுவதாகவும் இதற்கமையவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தப் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் இந்தியா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன.
இந்தியாவிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் எஞ்சின் ஒன்றும் 12 ரயில் பெட்டிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
மேலும் 5 ரயில் பெட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொண்டுவரப்படும்.
2020ம் ஆண்டில் மேலும் 160 பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இவை தொடர்பான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்தார்.
Related posts:
|
|