ரயில் சேவையின் தரம் மேம்படுத்தப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Sunday, August 27th, 2017

ரயில் சேவையின் தரம் மேம்படுத்தப்படுமென்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் .அத்துடன்  ரயில் சேவை நட்டத்தில் இயங்கிய போதிலும், அதனை தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.அபேவிக்ரம தமது பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். புதிய ரயில் எஞ்சின், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றுக்காக கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஒன்றரை வருட காலப்பகுதியில் இவை பெற்றுக்கொடுக்கப்படும். இந்திய நிதியுதவியின் கீழ் எஞ்சின் மற்றும் பெட்டிகள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. மலையக ரயில் சேவைக்காக தனியான எஞ்சின் ஒன்று பெற்றுக் கொள்ளப்பட உள்ளது. ரயில் பாதைக் கட்டமைப்பு மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு முழுமையாக நவீனமயப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் கூறிளார்.

Related posts: