ரயில் என்ஜின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, August 1st, 2017

 

உரிய விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ரயில் என்ஜின் சாரதிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் என்ஜின்களில் காணப்படும் சில இயந்திரக் கோளாறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ரயில் என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கப் பிரதிநிதி இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts: