ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு!

Friday, December 22nd, 2017

ரயில் இயந்திர சாரதி உதவியாளர் தரம் 111 இற்கான சேவையில் இணைத்துக் கொள்வதற்காக இன்று(22) நடைபெறவிருந்த பகிரங்க போட்டிப் பரீட்சை ரயில்வே பொது முகாமையாளரின் கோரிக்கைக்கு அமைவாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேபோன்று ரயில்வே திணைக்களத்தின் ரயில் எஞ்சின் சாரதி தரம் 111 இற்கான ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப்பரீட்சை -2016 (2017) பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த பரீட்சை இம்மாதம் 30ஆம் திகதி நடைபெறவிருந்ததாக பரீட்சைகள் திணைக்கள் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: