ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை !
Friday, June 24th, 2016கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த டயட்ட கிருள்ள ரயிலில் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும் இடையில் ( இராமாகோயிலடியில்) நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதில் மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே தற்கொலை செய்துள்ளார் சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி சாவகச்சேரி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் சடலம் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Related posts:
பொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை!
இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எ...
தரமற்ற மற்றும் மலிவாக இறக்குமதி செய்யப்படும் பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவு பெட்டிகள...
|
|