ரணில் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024

ரணில் விக்கிரமசிங்க நோயுற்றவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் என்றும், அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு முறையாவது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு  நாட்டு மக்களுக்கு  இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts: