ரணிலின் அரசியல் பங்காளிகளால் ஏமாற்றப்பட்ட மக்களின் ஏக்கங்கள் போக்கப்படும் – குடாரப்பில் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, June 17th, 2020

ரணிலின் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு பங்காளிகளாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏமாற்றப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் அபிலாஷைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சிறந்த பொறிமுறை உண்டு. அதை அவர் நிறைவேற்றித்தருவதற்கான அங்ககீகாரத்தை நீங்களே அவருக்கு வழங்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஐயாத்துரை ஶ்ரீறீரங்கேஸ்வரன்  கோரிக்கைவிடுத்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு குடாரப்பில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போது மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தெர்டர்பில் கேட்டறிந்தபின் கருத்தக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில் –

கடந்த ஆட்சிக்காலத்தில் ரணிலின் பங்காளிகளாக இருந்த கூட்டமைப்பினர் இப்பகுதியின் மக்கள் மற்றும் அவர்களது அபிவிருத்தி தொடர்பில் எதுவும் சிந்திக்கவில்லை. இனியும் அவர்கள் வாக்குகளை கேட்டுத்தான் உங்களிடம் வருவார்களே தவிர உங்களது தேவைப்பாடுகளை தீர்த்துவைக்க ஒருபோதும் முன்வரபோவதும் இல்லை.

ஆனாலும் நாம் மக்களின் நலன்களை முன்னிறுத்தியே பல்வேறு பெரும்பணிகளை செய்து வருகின்றோம். எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏழை மக்களின் வாழ்வியல் மீட்சிக்காக பல்வேறு பொறிமுறைகளை முன்னிறுத்தி திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளார்.

அந்த சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்திக்காட்டுவதற்கு மக்களாகிய உங்களது ஆதரவுப்பலமே அவசியமானதாகும். அந்த பலத்தை எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர7;களிடம் இம்முறை நிங்கள் வழங்குவீர்களாயால் ரணிலின் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு பங்காளிகளாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏமாற்றப்பட்ட உங்கள் ஒவ்வொருவரது எதிர்பார்ப்புக்களுக்கும் அபிலாஷைகளுக்கும் எம்மால் அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்காலப் பகுதியில் முழுமையாக தீர்வுகண்டுதரப்படம் என்றார்.

Related posts:

விடுமுறையில் சென்று திரும்பும் பொலிஸாரை 7 நாட்கள் தனித்திருக்க செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறி...
பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்றுமுதல் ஆரம்பபம் - கல்வி அமைச்...
புதிய தொழில்நுட்பத்துடன் திரைப்படக் கூட்டுத்தாபனம் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் - 2023 ரைகம் விர...