ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Monday, April 5th, 2021

தமது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர மற்றும் மயாதுன்ன கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அறிவித்தலை வெளியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பினை மேன்முறையீட்டு நீதிமன்றம்  இன்றைய தினம் வரை பிற்போட்டிருந்தது.

இந்தநிலையில், சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: