ரக்பி வீரர் தாஜூடினின் உடல் பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து விசாரணை?

ரக்பிவீரர் வசிம் தாஜுடினின் உடல் பாகங்கள் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படுமா என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய தாஜூடினின் உடல் பாகங்கள் உள்ளிட்ட 26 பேரின் உடல் பாகங்கள் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்துமா?
மாலம்பே தனியார் மரத்துவ கல்லூரிக்கு தனியார் மருத்துவமனை அனுமதியும், சுகாதார சேவைப் பணிப்பாளரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது ஓர் போதனா வைத்தியசாலை எனவும் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாஜூடினின் உடல் பாகங்கள் உள்ளிட்ட 26 பேரின் உடல் பாகங்கள் எவ்வாறு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது என நலிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுவரையில் அறிக்கை கிடைக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|