ரக்பி விரர் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் கைதாகலாம்!

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட முதலாவது பிரேதப் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட உடற்கூறுகள் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்ய முடியும் என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கிடைத்துள்ள சாட்சியங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொக்சியிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து கைப்பற்றிய மனித உடற்கூறுகள் அடங்கிய 17 பொதிகளை கொழும்பு பிரதான சட்டவைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மேலதிக நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
|
|