யோஷிதவின் வீசா விண்ணப்பத்தை நிராகரித்தது அவுஸ்திரேலியா!

யோஷித ராஜபக்ஸ, அவுஸ்திரேலியா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த வீசா விண்ணப்பத்தை கொழும்பில் உள்ள அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யோஷித ராஜபக்ஸவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதுடன் வெளிநாடு செல்ல அவர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றிருந்தார்.யோஷிதவின் முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியா செல்ல வீசா கோரி அவர் விண்ணப்பம் செய்திருந்தார்.
எவ்வாறாயினும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவது மற்றும் மேலும் பல காரணங்களை காட்டி வீசா வழங்க முடியாது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.இந்த நிலையில், தனது விண்ணப்பத்தை மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறு கோரிக்கை விடுக்க யோஷித ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
Pick Me வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம் - அடுத்த மூன்று ஆண்ட...
பொதுமக்களுக்கு சேவை செய்யும் போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் - அரச ஊழியர்களுகளுக்கு அமைச்சர் டலஸ் ...
|
|