யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் பணிப்பு!

Wednesday, February 1st, 2023

நெல் மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை எதிர்வரும் சிறு போகத்துக்கு ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் கம்பனி ஆகியவற்றின் கிடங்குகளில் தற்போது 30,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இருப்பதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக 25,000 மெட்ரிக் தொன் உரத்தினை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள யூரியா உரத்திற்கு மேலதிகமாக 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ரூ.10 பில்லியனுக்கு கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை கையிருப்பில் வைத்திருக்க விவசாய அமைச்சு நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 சிறு போகத்தில் நெல் செய்கைக்கு அத்தியாவசியமான மூன்று வகையான உரங்களும்; டிஎஸ்பி, எம்ஓபி, யூரியா உரங்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படவுள்ளது.

அதற்கமைவாக அனைத்து நெற்செய்கையாளர்களுக்கும் சிறு [போகத்தின் ஆரம்பத்திலேயே அடிப்படை உரத் தேவையை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதற்கான 35,000 மெட்ரிக் தொன் உரம் பெப்ரவரி நடுப்பகுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

35,000 மெட்ரிக் தொன் எம்ஓபி உரம் உபரியாக உர நிறுவனங்களிடம் உள்ளதாகவும், 60,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் மாத இறுதிக்குள் இருப்பு வைக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கொள்முதல் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: