யுத்தத்தில் இறந்த அனைவரும் ஒரே இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும் – சுயேட்சைக்குழுவின் முன்மொழிவை தூக்கி எறிந்தது வல்வெட்டித்துறை நகரசபை!

Monday, February 18th, 2019

குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு தீருவில் பகுதியிலும் ஏனைய போராளிகள் பொதுமக்களை நினைவு கூர வல்வெட்டித்துறை நகரத்திலும் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற சுயேட்சைக்குழுவின் முன்மொழிவை வல்வெட்டித்துறை நகரசபை நிராகரித்துள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையில் சுயேட்சைக் குழுவினரால் இன்றையதினம் குறித்த முன்மொழிவு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் குறித்த முன்மொழிவு சபையில் விவாதத்திற்கு வந்த நிலையில், ஏற்கனவே இரண்டு தடவைககள் குறித்தவிடயம் தொடர்பில் சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு  விவாதிக்கப்பட்ட நிலையில் அது அனைத்து போராளிகளுக்கும் பொதுவாக அமைக்பப்பட வேண்டும் என வாக்களிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை மீறி இன்று இச்சபையில் இது தொடர்பான மற்றுமொரு பிரேரணை சுயேட்சைக் குழுவினரால் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே சபை அனுமதி வழங்கிய ஒரு விடையத்தை மீண்டும் மீண்டும் கொண்டுவருவது தேவையற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

அந்தவகையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற என்ற நிலைப்பாட்டுக்கு அமைவாக குறித்த முன்மொழிவு தேவையற்றதென கூறி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைபப்பு கட்சிகளின் 8 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிவையில் சுயேட்சைக்குழு கூட்டின் 4 பேர் அதை ஆதரித்திருந்தமையால் குறித்த முன்மொழிவு தேவையற்றதென சபையால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதனால் மக்களுக்கான கட்சியின் பணிகள்  திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருக...
தபால் ஊழியர் வேலை நிறுதத்தால் இலட்சம் பொதிகள் தேக்கம்!
சம்பள அதிகரிப்பை ஊழியர்களுக்கு வழங்கத் தவறிய தனியார் துறையினர் மீது நடவடிக்கை!
நேர்முகப் பரீட்சை எதுவுமின்றி அதிபர் சேவைவக்கு உள்ளீர்ப்பு!
சுகயீன விடுமுறைப் போராட்டத்தை பிற்போட்டது தபால் சேவை சங்கங்கள் !