யுத்தத்தின் பின்னர் சிவில் பாதுகாப்பு படையின் பலம் அபிவிருத்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020

போர் வெற்றிகரமாக முடிந்த பின்னர், சிவில் பாதுகாப்பு படையின் பலம் அபிவிருத்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்..

பயங்கரவாத அச்சுறுத்தலுக்குள்ளான அனைத்து முன்னணி கிராமங்கள், புனித மத தலங்கள் மற்றும் அப்பாவி விவசாய சமூகங்கள் ஆகியவற்றை சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாத்தனர், இதன் காரணமாகவே, யுத்தம் இடம்பெற்ற களமுனைகளுக்கு அதற்கென பயிற்றுவிக்கப்பட்ட எமது இராணுவத்தை அனுப்பி வைக்க முடிந்தது.

பயங்கரவாதிகளை தோற்கடிக்க புதிய உத்திகளை கண்டறிய வேண்டியிருந்தது, ஆனால் அந்த சகாப்தத்தில் நாங்கள் ஒரு சிறிய இராணுவமாக இருந்தமையால் அது அரிதாகவே நிர்வகிக்கப்பட்டது.

எல்லைப்புற முன்னணி கிராமங்களை தாக்கும்போது தீவிரவாதிகள் எங்களுக்கு எதிராக “போர்ஸ் மல்டிப்ளையர்” எனும் தந்திரோபாயத்தை கடைப்பிடித்தனர். கிராமவாசிகளை பாதுகாப்பதற்காக இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களுக்கு நானும் எனது படை வீரர்களுடன் சென்றிருக்கிறேன்.

இதன்போது “அவர்களில் சிலரை எங்களால் காப்பாற்ற முடிந்தாலும், அப்பாவி ஏழை கிராமவாசிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் காவு கொல்லப்பட்டதனை நான் கண்டேன்.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய கிராமங்களில் பாதுகாப்பில் ஈடுபடுத்த போதுமான வீரர்கள் இல்லாத நிலையில், அரசாங்கம் அவர்களது சொந்தக் கிராமத்தை பாதுகாப்பதற்காக “ஊர் காவல் படை” என்ற அமைப்பை உருவாக்கியது.

பின்னர் இந்த கிராம வாசிகளை கொடூரமான பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடும் ஒரு போராட்ட சக்தியாக மாற்றியமைத்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: